கொந்தகை அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் ஆய்வு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட நான்கு தளங்களில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி 13 முதல் நடந்து வருகின்றன. கொந்தகையில் 4 குழிகள் தோண்டப்பட்டு 15 முதுமக்கள் தாழிகளும் பத்து சமதளத்தில் புதையுண்ட எலும்பு கூடுகளும் கண்டறியப்பட்டன. 3 முதுமக்கள் தாழிகளில் உள்ள பொருட்கள் வெளியே எடுக்கப்பட்ட நிலையில் 4வது தாழியை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. மூடியுடன் கூடிய இந்த முதுமக்கள் தாழி உடையாமல் இருப்பதால் உள்ளே எலும்புகள் சேதமடையாமல் இருக்க வாய்ப்புள்ளதாகவும், புதைக்கப்பட்ட மற்ற பொருட்களும் முழுமையாக கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. செப்டம்பருடன் இப்பணிகள் முடிய உள்ள நிலையில் முதுமக்கள் தாழிகள் அனைத்தையும் ஆய்வு செய்யும் பணியில் தொல்லியல் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: