ஓராண்டு சஸ்பெண்ட் 12 பாஜ எம்எல்ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் மழைக்கால கூட்டத் தொடரின்போது கடந்த 5ம்  தேதி பாஜ எம்எல்ஏக்கள் இடஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர். மேலும், தற்காலிக சபாநாயகர் பாஸ்கர் ஜா இருக்கை அருகே  சென்று தவறாக நடக்க முயன்றனர். இதனை தொடர்ந்து 12 பாஜ எம்எல்ஏக்கள்  மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 12 பாஜ எம்எல்ஏக்களும் ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது தொடர்பான தீர்மானம் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. நாடாளுமன்ற விவகாரங்கள் துணை இணை அமைச்சர் அனில் பாராப்  இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார். குரல் வாக்கெடுப்பு மூலமாக இது நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில்தாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுக்கு எதிராக 12 பாஜ எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர். தங்களது சஸ்பெண்டை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர் அபிகால்ப் பிரதாப் சிங் மூலமாக மனு தாக்கல் செய்தனர்.

Related Stories: