திருவையாறு பகுதியில் குறுவை சாகுபடி நடவு பணியில் விவசாயிகள் தீவிரம்

திருவையாறு : தமிழக அரசு குறுவை சாகுபடிக்காக ஜுன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு அதை தொடா்ந்து 16-ம் தேதி கல்லணை திறக்கப்பட்டது. திருவையாறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை தீவிரமாக செய்து வந்தனா்.இந்த நிலையில் திருவையாறு அடுத்த மேலத்திருப்பந்துருத்தியில் குறுவை நடவு பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் நிலப்பரப்பில் விவசாயம் ஆற்றுப் பாசனத்தை நம்பி உள்ள பகுதியாகும். ஆற்றில் தண்ணீர் வந்த பிறகு விதை விதைத்து நாற்று பறித்து அவற்றை நடவு செய்யும் பணியானது நடைபெற்று வருகிறது.தமிழக அரசு விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டம் கடந்த மாதங்களில் அறிவித்து வழங்கப்பட்டுவருகிறது.

நடவு பணி முடிந்த விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலாிடம் சிட்டாடங்கல் பெற்று வேளாண்மை அலுவலரிம் பதிவு செய்து குறுவை தொகுப்பு திட்டமான ஏக்கருக்கு 2 மூட்டை யூரியா, 1 மூட்டை டிஏபி, ½ மூட்டை பொட்டாஷ் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. குறுவை தொகுப்புத் திட்டத்தால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். குறுவை சாகுபடி செய்து இதுவரை குறுவை தொகுப்புத் திட்டம் பெறாத விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலாிடம் சிட்டாடங்கலை பெற்று வேளாண்மை அலுவலரை அணுகி குறுவை தொகுப்புத்திட்டத்தை பெற்றுக்கொள்ளலாம்.

Related Stories: