காஞ்சிபுரத்தில் 12,991 பேர் பிளஸ் 2 தேர்ச்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பிளஸ் 2 படித்த 12,991 பேரும் தேர்ச்சி பெற்றதாக, கலெக்டர் ஆர்த்தி தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் 6946 மாணவிகள், 6045 மாணவர்கள் என மொத்தம் 12,991 பேர் பிளஸ் 2 படித்தனர். அதில், 65 பேர் மாற்றுத்திறனாளிகள். அரசு மற்றும் நகராட்சி பள்ளிகள் 52, அரசு உதவி பெறும் பள்ளிகள் 5, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் 45 உட்பட மொத்தம் 102 பள்ளிகளில் 12,991 மாணவ, மாணவிகள் கடந்த ஆண்டு பிளஸ் 2 படித்தனர். கொரோனா பரவல் காரணமாக, மாணவர்களின் பிளஸ் 2 தேர்வு நடத்த முடியாமல் போனது இதையடுத்து அனைவரும் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இதில் மாணவர்களின் கல்வி திறன் அறியாமல் போகும் நிலை ஏற்படும் என கல்வியாளர்கள் புகார் கூறினர்.

இதையடுத்து அவர்களது பிளஸ் 1 மதிப்பெண், பிளஸ் 2 வகுப்பில் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் வைத்து தேர்ச்சி அறிவிப்பதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்தது. இந்நிலையில், காஞ்சிபுரத்தில் படித்த 12,991 மாணவர்களும், 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற கலெக்டர் ஆர்த்தி தெரிவித்தார். மேலும், தேர்ச்சி பெற்றவர்கள் பற்றிய பட்டியலையும் வெளியிட்டார். இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ப.அ.ஆறுமுகம், முதன்மைக் கல்வி அலுவலரின் உதவியாளர்கள் காந்திராஜன், ஜீவானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: