பெகாசஸ் உளவுப் புகார் குறித்து ஒன்றிய அரசு திட்டவட்ட மறுப்பு: தவறானவை, தீய நோக்கம் கொண்டவை என்று விளக்கம்

டெல்லி: சர்வதேச ஊடக நிறுவனங்கள் முன்வைத்துள்ள உளவு புகார்களை ஒன்றிய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை, தீய நோக்கம் கொண்டவை என்கிறது ஒன்றிய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம். அங்கீகரிக்கப்பட்ட அரசு அமைப்புகளின் ஒப்புதல் இல்லாமல் யாரையும் உளவு பார்க்கவில்லை என்று ஒன்றிய அரசு உறுதிப்பட கூறியுள்ளது. குறிப்பிட்ட சிலரை அரசு வேகு பார்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் அடிப்படை ஆதாரமோ, உண்மையோ இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது.

குடிமக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான தனி உரிமையை பாதுகாப்பதில் ஒன்றிய அரசு உறுதியுடன் இருப்பதாக தகவல் தொடர்பு அமைச்சகம் கூறியுள்ளது. தனிப்பட்ட விவரங்களை பாதுகாக்கவும், சமூக வலைதளங்களை பயன்படுத்தும் இந்தியர்களின் பாதுகாப்புக்கும் தனித்தனியே இரண்டு சட்டங்கள் இயற்றப்பட்டு இருப்பதை ஒன்றிய அரசு சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச நிறுவனங்கள் மிக மோசமான புலனாய்வை மேற்கொண்டு இருப்பதையும், முன்முடிவுடன் அணுகி இருப்பதையும் இது உறுதிப்படுத்தி இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கும், 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்திலும் உரிய பதில் அளிக்கப்பட்டதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. பெகாசஸ் பைபரை பயன்படுத்தி அரசு அமைப்புகள் வேகு பார்ப்பதாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வாட்ஸ் அப் உள்ளிட்ட அனைத்து தரப்பும் அதனை மறுத்திருப்பதை ஒன்றிய அரசு நினைவு கூர்ந்துள்ளது.

Related Stories: