முக்கிய செய்தி இந்தியா மேகதாதுவில் 100 சதவீதம் புதிய அணை கட்டுவது உறுதி; மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது: கர்நாடக முதல்வர் பேட்டி Jul 17, 2021 மகேஹர தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் முதல் அமைச்சர் கர்நாடக டெல்லி: மேகதாதுவில் 100 சதவீதம் புதிய அணை கட்டுவது உறுதி என டெல்லியில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேட்டியளித்தார். தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சி குழு டெல்லியில் நேற்று மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து, மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று கோரி கடிதம் வழங்கியது. இந்த நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதற்காக கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று மதியம் பெங்களூருவில் இருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதி தெரிவித்தேன். ஆனால் அந்த மாநிலம் மேகதாது திட்டத்தை எதிர்ப்பதில் பிடிவாதமாக உள்ளது. மேகதாதுவில் அணை கட்ட சட்டத்தில் சாதகமான அம்சங்கள் உள்ளன. இந்த திட்டத்தை செயல்படுத்த நாங்கள் சக்தியைமீறி முயற்சி செய்கிறோம். அதனால் மேகதாதுவில் 100 சதவீதம் புதிய அணை கட்டுவது உறுதி. கர்நாடக மக்களுக்கு இந்த உறுதிமொழியை அளிக்கிறேன் என டெல்லியில் கர்நாடக முதல்வர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி திறக்கும் நாளிலேயே பாடப்புத்தகம் வழங்கப்படும்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: மராட்டிய மாநில பாஜக கூட்டணி அரசு வலியுறுத்தல்
மக்களவை தேர்தல்.. 221 சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்று திமுக கூட்டணி சாதனை: 8 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வாக்கு..!!
குமரிமுனையில் கடல் சார் பாதசாரிகள் பாலம்.. மு.க.ஸ்டாலின் தலைமையில் உலகத் தரத்தில் உயரும் நெடுஞ்சாலைத் துறையின் சாலைகள்!!
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்?.. டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் தொடங்கியது..!!
புதிய டெண்டர் விடும் வரை சென்னையில் முக்கிய இடங்களில் வாகன நிறுத்தம் இலவசம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
தங்கம் வாங்க நல்ல நேரம்.. அதிரடியாக ரூ.1,520 குறைந்த தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.53,200க்கு விற்பனை..!!
மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்த எனது கணிப்பு தவறாகிவிட்டது: தேர்தல் கருத்துக்கணிப்பு நிபுணர் பிரசாந்த் கிஷோர்
இஸ்ரேல் – ஹமாஸ் போர்: போர்நிறுத்த முன்மொழிவு குறித்து ஹமாஸ் இன்னும் பதிலளிக்கவில்லை; கத்தார் அரசு தகவல்
தோல்வி என்பது பிரதமர் மோடிக்கு தான், பாஜக ஆட்சி நிலைக்குமா? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும் : ப.சிதம்பரம்
ஒன்றிய அரசின் SSC, ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா 6 மாதக் கால உறைவிடப் பயிற்சி வழங்குகிறது தமிழ்நாடு அரசு.
தமிழ்நாடு பாஜகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல்.. பொய் சொல்வது அண்ணாமலை ரத்தத்திலேயே ஊறிவிட்டதாக கல்யாணராமன் சாடல்!!
சிதைந்த மோடியின் பிம்பம்..பாஜக தலைமையை நிராகரித்த இந்தியர்கள்..கைகொடுக்காத ராமர் கோயில் அரசியல் : சர்வதேச ஊடகங்கள் விமர்சனம்