தூத்துக்குடி துப்பாக்கிக்சூடு விசாரணை எடப்பாடிக்கு சம்மன் அனுப்பப்படுமா? ஆணைய வழக்கறிஞர் பேட்டி

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிக்சூடு குறித்த ஒரு நபர் ஆணையத்தின் 28வது கட்ட விசாரணையில் துப்பாக்கி சூடு நடந்தபோது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதுகுறித்து ஆணைய வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் அளித்த பேட்டி: தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த ஒருநபர் ஆணையத்தின் 28வது கட்ட விசாரணை ஜூலை 5ம்தேதி துவங்கி நேற்று வரையில் நடந்தது. 28வது கட்ட விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிப்பதற்காக அன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் 102 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் 95 பேர் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.

துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து இன்னமும் 300 பேரிடம் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கிறோம். விசாரணைக்கு ரஜினி ஆஜராவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன் அனுப்பப்படுமா என கேள்வி எழுப்பியதற்கு, ஆணையம் தரப்பிலிருந்து விளக்கம் தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே சம்மன் அனுப்பப்படும். எனவே முன்னாள் முதல்வருக்கு சம்மன் அனுப்புவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார்.

Related Stories: