செங்கம் பகுதியில் குப்பைகள் கொட்டுவதால் பாழாகும் ஆறு-அதிகாரிகள் நடவடிக்கைக்கு கோரிக்கை

செங்கம் : செங்கம் பகுதியில் உள்ள ஆற்றில் குப்பை கழிவுகள் கொட்டும் இடமாக மாறியுள்ளது. இதனை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கம் நகரில் உள்ள ஆற்றில் கிணறுகள் அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆற்றில் சிலர் கழிவுநீரை திறந்துவிடுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் குப்பை கழிவுகளை ஆற்றில் கொட்டி விட்டு செல்வதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அப்பகுதியில் குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், கழிவுநீர் ஆற்றில் கலந்து அப்பகுதி முழுவதும் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. இதனால், ஏராளமான பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், இதனால் குடிநீர் மாசு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செங்கம் பகுதி குடியிருப்புகளின் கழிவுநீர் ஆற்றில் கலக்காதவாறு மாற்று ஏற்பாடு செய்தும், குப்பை கழிவுகள் ஆற்றில் கொட்டாதவாறும் நிலத்தடிநீர் மாசு ஏற்படாதவாறு துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: