சென்னை : தமிழ்நாட்டில் கல்லூரிகளை திறப்பது குறித்து மக்கள் நல்வாழ்வுதுறை அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு முதல்வர் அறிவிப்பார் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.சென்னை தலைமை செயலகத்தில் ஆஸ்திரேலிய நாட்டு தூதரக அதிகாரிகள், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியை சந்தித்து பேசினர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் ஆகஸ்ட் 1ம் தேதி திட்டமிட்டப்படி தொடங்கும் என்றார்.