ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் விளைச்சல் அமோகம் பீட்ரூட் அறுவடை பணிகள் தீவிரம்

ஊட்டி : ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் பீட்ரூட் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. நீலகிரி  மாவட்டத்தில் சுமார் 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மலை காய்கறிகள்  பயிரிடப்படுகின்றன.  ஊட்டி சுற்று வட்டார பகுதிகளான முத்தோரை பாலாடா,  கல்லக்கொரை ஆடா, கப்பத்தொரை, எமரால்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பல  ஏக்கர் பரப்பளவில் பீட்ரூட் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது நல்ல  விளைச்சலை தந்துள்ள நிலையில், கட்டுபடியான விலையும் கிடைத்து வருகிறது.  இந்த சூழலில் இப்பகுதிகளில் மழை தீவிரமடைந்து தொடர்ச்சியாக பெய்து வருகிறது.

இதனால் மண்ணுக்கு அடியில் விளைய கூடிய பீட்ரூட் உள்ளிட்ட  காய்கறிகள் அழுக கூடிய அபாயம் நீடிக்கிறது. அவற்றை அறுவடை செய்யும்  பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  மழையையும்  பொருட்படுத்தாமல் அறுவடை செய்து தரம் பிரித்து அவற்றை மார்க்கெட்டிற்கு  விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது.

Related Stories: