ஈராக்கில் கொரோனா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து; 52 நோயாளிகள் உயிரிழப்பு: பலத்த தீக்காயம் அடைந்த 50 பேருக்கு தீவிர சிகிச்சை..!

பாக்தாத்; ஈராக்கில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். ஈராக்கின் தெற்கு நகரமான நாசியாவில் கொரோனா நோயாளிகளுக்கு என்று மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு 200-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த பிராணவாயு சேமிப்பு கிடங்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பயங்கரமாக வெடித்து சிதறின.

பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் உதவியுடன் அங்கு சிகிச்சை பெற்று வந்த 100-க்கும் மேற்பட்டவர்களை காப்பாற்றி பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்களும் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் தீ மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக கொரோனா நோயாளிகள் 52 பேர் உடல் கருகி உயிரிழந்துவிட்டனர். தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட 50 பேருக்கு நாசியாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிராணவாயு சேமிப்பு கிடங்களில் போதுமான தீ தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதை அடுத்து மருத்துவமனை நிர்வாக அதிகாரி பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: