விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு!: தி.மலை ஆட்சியர் அலுவலகம் எதிரே விவசாயிகள் தர்ணா போராட்டம்..!!

திருவண்ணாமலை: விளைநிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் எதிரே நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு கட்டங்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பவர் கிரிட் நிறுவனத்தை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயர்மின் கோபுரம் அமைக்க கைககபடுத்தப்பட்ட விளைநிலங்களுக்கு பாரபட்சம் பார்க்காமல் அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் எதிரே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தடுப்பு வேலிகளை அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். இருப்பினும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Stories: