பாணாவரம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைப்பு

பாணாவரம் : பாணாவரம் அடுத்த மேலேரி கிராமத்தில் அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து பொதுமக்களுக்கு தினமும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முறையாக பராமரிக்கப்படாமலும், மூடப்படாமலும் திறந்த நிலையில் இருந்ததால் பறவைகளின் கழிவு மற்றும் காற்றில் இருந்து வரும் பல்வேறு கழிவுகள் குடிநீரில் கலக்கிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.

இதுகுறித்து தினகரன் நாளிதழில் நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, நெமிலி பிடிஓக்கள் பார்த்தசாரதி, அன்பரசன் ஆகியோர் உத்தரவின்பேரில், வட்டார ஒருங்கிணைப்பாளர் துளசி, மேலேரி ஊராட்சி செயலாளர் சிவலிங்கம் மற்றும் ஊழியர்கள் உதவியுடன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைத்தனர்.

Related Stories: