போலீசை அறைந்த பாஜ.வினர்; பத்திரிகையாளரை தாக்கிய ஐஏஎஸ்: உபி.யில் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வன்முறை

லக்னோ:  உத்தரப் பிரதேசத்தில் 479 மண்டல பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, 17 மாவட்டங்களில் வன்முறைகள் அரங்கேறின. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன. 

எடாவா காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பிரசாந்த் குமாரிடம் செல்போனில் பேசும் போலீஸ் அதிகாரி ஒருவர், ‘சார்... பாஜ தொண்டர்கள் என்னை கன்னத்தில் அறைந்து விட்டனர். அவர்கள் வெடிகுண்டுகளை எடுத்து வந்துள்ளனர்,’ என புலம்புகிறார். எடாவா மாவட்டம், பார்புரா மண்டலத்தில் இந்த அதிகாரி அறை வாங்கியதை காவல்துறையும் உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 உன்னோவ் மாவட்ட வளர்ச்சி அதிகாரியாக உள்ளவர் திவ்யன்ஷு பட்டேல், ஐஏஎஸ் அதிகாரியான இவர் பாஜ.வுக்கு ஆதரவாக தேர்தல் முறைகேடு செய்ததாக தெரிகிறது. இதை  பத்திரிகையாளர் ஒருவர் வீடியோ எடுத்தார். இதை பார்த்து  ஆத்திரமடைந்த  பட்டேல், அந்த  பத்திரிகையாளரை அடித்து நொறுக்குகிறார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: