மாவீரன் அழகு முத்துக்கோனுக்கு நினைவு மண்டபம் கட்ட வேண்டும்: கோகுல மக்கள் கட்சி வேண்டுகோள்

சென்னை: கோகுல மக்கள் கட்சியின் தலைவர் சேகர் அறிக்கை: முதல் சுதந்திர போராட்ட தியாகி மாவீரன் அழகுமுத்துகோன் பிறந்த நாளில் சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கோகுல மக்கள் கட்சி தலைவர் சேகர் தலைமையில் சமுதாயத் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் நேற்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மாவீரன் அழகுமுத்துக்கோன் மற்றும் 6 தளபதிகள், 242 வீரர்களின் கை கால்களை வெட்டியும், சங்கிலியால் கட்டி பீரங்கி வாயில் முன் நிறுத்தி பீரங்கி குண்டுகளால் சுடப்பட்ட அந்த நடுகாட்டு சீமை என்னும் இடத்தில் இன்றைய இளையசமுதாய மக்களுக்கு வரலாறும் நாட்டுப்பற்றும் தெரியும் வகையில் நினைவு மண்டபம் கட்டி அவருடைய வரலாற்றை அரசு பாடப்புத்தகத்தில் குறிப்பிட வேண்டும். அண்டை மாநிலமான தெலுங்கானா அரசு கொடுத்தது போல தமிழக அரசும் மானிய விலையில் ஆடு, மாடுகளை கொடுத்து கால்நடை நலவாரியம் அமைத்து இவர்களின் பிள்ளைகளும் கல்வி வேலைவாய்ப்பில் வளம்பெற வேண்டும். செஞ்சிகோட்டையை ஆனந்தக் கோனார் கோட்டை என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும்.

Related Stories: