ஓசூர் அருகே விவசாய நிலத்தில் கெயில் நிறுவனம் குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு

ஓசூர்: ஓசூர் அருகே விவசாய நிலத்தில் கெயில் நிறுவனம் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் குழியில் இறங்கி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கெயில் நிறுவனம் சார்பில் கொச்சின் - பெங்களூரு வரை கேஸ் பைப்லைன் பதித்து வருகின்றனர். இந்த பணிகள் 2011 முதல் நடந்து வருகிறது. சமீபத்தில் தமிழக தேர்தலுக்கு முன்பாக அங்கு குழிகள் தோண்டப்பட்டு பைப்லைன் போடப்பட்டு வந்தது. அந்த நேரங்களில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் தேர்தல் முடிந்த பிறகு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் பைப்லைன் அமைக்கும் பணி தொடங்கப்பட்டதால் விவசாயிகள் குழியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தேன்கனிக்கோட்டை தாசில்தார் இளங்கோ மற்றும் காவல்துறையினர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் ஏற்கனவே நாங்கள் அறிவித்ததன் படி பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் விவசாயிகள் எங்களுக்கு எந்தவிதமான இழப்பீடும் தருவதில்லை. இந்நிலையில் எங்கள் நிலத்தில் பைப்லைன் அமைக்க அனுமதிக்கமாட்டோம் என்று அவர்கள் குழியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: