பெரம்பலூரில் 2ம்நிலை காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வு-26ம் தேதி துவக்கம்

பெரம்பலூர் : பெரம்பலூரில் 10 நாட்கள்நடை பெறும் 2ம்நிலைக் காவலர் பணியிடங்களுக்கான தேர்வு வரும் 26ம்தேதி தொடங்குகிறது. பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த 1400ெபேர் பங்கேற்க ஏற்பாடு. தேர்வுநடக்கும் மை தானத்தை மாவட்ட எஸ்பி மணி நேரில் ஆய்வு செய்தார்.திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், திருச்சி சரக டிஐஜி ராதிகா ஆகியோரது உத்தரவுகளின் பேரில், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வருகிற 26ம்தேதி (திங்கட்கிழமை) துவங்கி 10 நாட்களுக்கு, 2ம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதித் தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வு ஆகியத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இதில் பங்கேற்க பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இருந்து விண்ணப்பித்தவர்களில் சுமார் 1,400 பேர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 10நாட்கள் நடக்கும் இந்தத் தேர்வுகளில் முதல் 3 நாட்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கி றது. அதனைத் தொடர்ந்து உயரம், மார்பளவு என உடல்தகுதிதேர்வும், பின்னர் விளையாட்டுத் திறன் கண்டறிய 1500 மீட்டர், 800 மீட்டர், 400 மீட்டர், 200 மீட்டர், 100 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், கயிறுஏறுதல், நீளம்தாண்டுதல் போட்டிகள் நடத்தப்படுகின்றன. தற்போது நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் தேர்வு நடத்தப்படும் மைதானத்தை சுத்தப்படுத்தி வருகின்றனர்.

இதனையொட்டி நேற்றுக் காலை பெரம்பலூர் மாவட்ட எஸ்பி மணி 2ஆம் நிலை காவலர் பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்படும் மாவட்ட விளையாட்டு மைதானத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மைதானத்தை தூய் மை செய்து தடகள போட்டிகள் நடக்கும் இடங்களில் முட்கள், கற்கள் இல்லாமல் சுத்தமாக இருக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். ஆய்வின்போது ஆயுதப்படை டிஎஸ்பி சுப்பையா, பெரம்பலூர் மாவட்ட தடகள பயிற்றுநர் கோகிலா ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: