வாஷிங்டன்: அமெரிக்காவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் காணாமல் போன 86 பேரில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். ஃபுளோரிடா மாநிலத்தின் மியாமி கடற்கரை அருகே 12 மாடிகளை கொண்ட குடியிருப்பு வளாகம் ஒன்று கடந்த ஜூன் 25ம் தேதி இடிந்து விழுந்தது. இதில் 54 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. விபத்து நடைபெற்று 2 வாரங்கள் கடந்துவிட்ட நிலையில் காணாமல் போன 86 பேரில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று மீட்பு குழுவினர் அறிவித்துள்ளனர்.