செயின்ட் லூசியா: வெஸ்ட்இண்டீஸ்-ஆஸ்திரேலியா இடையே இன்று தொடங்கும் டி20 தொடரில் முதல் ஆட்டம் செயின்ட் லூசியாவில் நடக்கிறது. வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி அங்கு 5 டி20, 3 ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. டி20 தொடர் ஜூலை 9, 10, 12, 14, 16 தேதிகளில் செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சம்மி அரங்கில் நடக்கும். ஒருநாள் தொடர் ஜூலை 20, 22, 24 தேதிகளில் பார்படாசில் உள்ள கென்சிங்டன் அரங்கில் நடைபெறும். நியூசிலாந்துக்கு எதராக மார்ச் மாதம் முடிந்த கிரிக்கெட் தொடருக்கு பிறகு 3 மாதங்கள் கழித்து ஆஸி இன்று களம் காணுகிறது.