பெரம்பலூர் அருகே மழையால் சேதம்: சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்த எஸ்எஸ்ஐ

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பெரம்பலூரில் இருந்து செஞ்சேரி- செட்டிக்குளம் பிரிவு ரோடு வரை ஏற்கனவே இருவழி சாலையாக மாற்றப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. தற்போது துறையூர் சாலையில் செஞ்சேரி பிரிவு ரோடு துவங்கி துறையூர் புறவழி சாலை வரை செல்லும் சாலை இருவழி சாலையாக மாற்றும் பணி நடந்து வருகிறது.  இந்த சாலையில் செஞ்சேரி-  பாளையம் இடையே உள்ள சாலையில் புதிய பாலம் கட்டுவதற்காக தற்காலிகமாக மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்ததால் இந்த சாலை சேறும் சகதியாக மாறியதுடன் பள்ளங்கள் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர்.

ரோந்து பணியில் இருந்த நெடுஞ்சாலைத்துறை ரோந்து எஸ்எஸ்ஐ முருகேசன் மற்றும் காவலர் சதீஷ் ஆகியோர் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதை பார்த்தனர்.  இதையடுத்து நேற்று சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை முருகசேன், சதீஷ் ஆகியோர் சரி செய்தனர். மேலும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக விபத்தின்றி வீடு செல்ல வசதியாக பணிகள் நடக்கும் இடங்களில் ரிப்ளெக்டர்களை ஸ்டிக்கர்களாக ஒட்டி வைக்க வேண்டும். தற்காலிக பேரிகாடுகள் அமைத்து விபத்துகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சாலையை விரிவுப்படுத்தும் பணியாளர்களிடம் கேட்டுக்கொண்டனர்.

Related Stories: