ஸ்டேன் சாமி மரணம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு சோனியா காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 10 தலைவர்கள் கூட்டாக கடிதம்!

டெல்லி: சமூக போராளி ஸ்டேன் சுவாமி மரணம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு எதிர்க்கட்சிகள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்தவரும், ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களுக்காக குரல் கொடுத்து வந்த மனித உரிமைகள் செயல்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி மருத்துவமனையில் உடல்நிலை மோசமடைந்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். இந்நிலையில் சமூக போராளி ஸ்டேன் சுவாமி மரணம் தொடர்பாக குதுயரசு தலைவருக்கு எதிர்க்கட்சிகள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.

சோனியா காந்தி, மு.க.ஸ்டாலின், சரத் பவார், மம்தா பானர்ஜி, தேவகவுடா, பரூக் அப்துல்லா, தேஜஸ்வி, டி.ராஜா, சீதாராம் யெச் சூரி உள்ளிட்ட 10 எதிர்க்கட்சி தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இந்த கடிதத்தில்; கொரோனா பாதித்து உடல்நிலை மோசமாகின நிலையிலும் ஸ்டேன் சாமி விடுவிக்கப்படவில்லை. ஸ்டேன் சாமி மீது பொய்யான வழக்கு பதிவு செய்ய காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டேன் சாமி மரணத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பீமா கோரகான் வழக்கில் வழக்கில் கைதான அனைவரையும் விடுவிக்க வேண்டும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பீமா கோரகான் வழக்கில் பலர் சிறையில் உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன.

Related Stories: