மேகதாது, புது தடுப்பணை பிரச்னைகள் குறித்து ஒன்றிய அமைச்சருடன் துரைமுருகன் இன்று ஆலோசனை

சென்னை: கர்நாடகா அரசு காவிரியின் நடுவே மேகதாது அணையை கட்டுவதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், மேகதாது அணை கட்டுவதை எதிர்க்க வேண்டாம் என்று கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்து எடியூரப்பாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், மேகதாதுவில் அணை கட்டுவதை ஏற்க முடியாது என்று உறுதியாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி புறப்பட்டு சென்றார். தற்ேபாது அவர், சாணக்கியாபுரியில் இருக்கும் புதிய தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஒன்றிய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசுகிறார். செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் கூறும்போது, ‘மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சருட் செகாவத்துடன், காவிரி, மேகதாது உள்பட அனைத்து  விஷயங் களையும் பேசுவேன்.

Related Stories: