தமிழகத்தில் 4,013 பேருக்கு கொரோனா: சிகிச்சை பலனின்றி 115 பேர் உயிரிழப்பு; 11 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை

சென்னை: தமிழகத்தில் நேற்று 1,60,194 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 4,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி 115 பேர் உயிரிழந்துள்ளனர்.இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:  தமிழகத்தில் நேற்று 1,60,194 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 4,013 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,92,420 ஆக உள்ளது. இதேபோல், கொரோனா தொற்றில் இருந்து நேற்று 4,724 பேர் நேற்று குணமடைந்தனர். அந்தவகையில் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 24,23,606 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 115 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதில், 22 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 93 பேர் அரசு மருத்துவமனைகளையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

இதுவரை சிகிச்சை பலனின்றி 32,933 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனை மற்றும் வீட்டுத்தனிமை என 36,881 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 27 மாவட்டங்களில் பாதிப்பு 100க்கும் கீழ் குறைந்திருந்தது. சென்னையில் பாதித்தோரின் எண்ணிக்கை 227 ஆக குறைந்துள்ளது. இதேபோல், அதிகபட்சமாக தஞ்சாவூர் 26, சென்னையில் 20, கோவையில் 5 பேர். திண்டுக்கல் ஈரோடு மதுரை, ஆகிய மாவட்டங்களில் தலா 6 பேர். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மயிலாடுதுரை, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். மேலும், அரியலுர், கடலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிபேட்டை, சிவகங்கை, நெல்லை, விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்களில் கொரோனா தொற்றால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: