இஸ்ரோ ரகசியம் கடத்தல் விவகாரம் விஞ்ஞானி நம்பி நாராயணன் சிபிஐ.யிடம் வாக்குமூலம்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்தவர் நம்பிநாராயணன். கடந்த 1994ம் ஆண்டு விண்வெளி ஆய்வு ரகசியத்தை வெளிநாட்டுக்கு கடத்தியதாக அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணையில், ரகசியங்கள் கடத்தப்படவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, விடுதலையான நம்பிநாராயணன், தன்னை கைது செய்ததில் சதி திட்டம் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. அதில், நம்பி நாராயணனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ததில் 2 டிஜிபிக்கள் உள்பட 18 பேர் குற்றவாளிகள் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், டெல்லி சிபிஐ டிஐஜி சந்தோஷ்சால்கே தலைமையிலான அதிகாரிகள் நேற்று நம்பி நாராயணனிடம் வாக்குமூலம் பெற்றனர்.

Related Stories: