சென்னை : யாருடைய தயவும் அதிமுக கட்சிக்கு தேவையில்லை என்று முன்னாள் அதிமுக அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார். சசிகலா ஆடியோ விவகாரம் குறித்து பேசியுள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம், சசிகலா என்பவர் யார் ? அவர் அம்மா வீட்டில் வேலைக்காரராக இருந்தார். வேலை முடிந்தது அவர் சென்றுவிட்டார். அவருக்கும் அதிமுக கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தன் பினாமி கட்சியை கூட ஜெயிக்க வைக்க இயலாத சசிகலா அதிமுகவை என்ன செய்து விட முடியும்?