பெரம்பலூர் ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: கலெக்டர் ஆய்வு

பெரம்பலூர்: பெரம்பலூர் ஒன்றியப் பகுதிக ளில் மேற்கொள்ளப் பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணி கலெக்டர் வெங்கடபிரி யா நேரில் ஆய்வுசெய்தார். பெரம்பலூர் ஊராட்சி ஒன் றியத்திற்கு உட்பட்ட ஆலம் பாடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வே லைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ19.72 லட் சம் மதிப்பீட்டில் நடைபெற் று வரும் ஊராட்சிமன்ற கட் டிட பணிகளையும், ரூ.1.89 லட்சம் மதிப்பீட்டில் தனிந பர் இடத்தில் மகாத்மா காந் தி தேசிய ஊரக வேலைவா ய்ப்பு உறுதியளிப்பு திட்டத் தின் கீழ் அமைக்கப்பட்டுள் ள ஆட்டு கொட்டகையினை யும் நேரில்சென்று பார்வை யிட்டு ஆய்வுசெய்து பயனா ளியிடம் ஆட்டுக்கொட்டகை பராமரிப்பு குறித்து கேட்டறி ந்தார்.  

பிறகு ஆலம்பாடி நியாய வி லைக் கடைக்கு நேரில் செ ன்று அத்தியாவசிய பொரு ட்கள் இருப்புகுறித்தும்,அள வீட்டு இயந்திரம் முதலான வற்றை பார்வையிட்டு ஆய் வு செய்தார். மேலும் ஆலம் பாடி ஊராட்சி ஒன்றியத்தி ற்குட்பட்ட செஞ்சேரி கிராம த்தில் தூய்மை இந்தியா 2019-20 திட்டத்தின்கீழ் ரூ24 லட்சம் மதிப்பீட்டில் நடந்து முடிந்த நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தினை பார்வையிட்டு உரத்தினை உற்பத்தி செய்யும் முறை கள் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இய க்குநர் லோகேஸ்வரி, ஊரா ட்சிகள் உதவி இயக்குநர் பாரதிதாசன், உதவி பொறி யாளர்(ஊரக வளர்ச்சி மற் றும் முகமை) தனபால் ம ற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உடனிருந்த னர்.

Related Stories: