புதுக்கோட்டை பெரியார் நகரில் கட்டிய வீட்டின் அடிப்பகுதியை 4 அடி உயர்த்தும் பணி தீவிரம்: நவீன தொழில் நுட்பத்தில் நடக்கிறது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை பெரியார் நகர் பகுதியில் கட்டிய வீட்டின் உயரத்தை அதிகரிக்க நவீன தொழில் நுட்பத்துடன் 4 அடிக்கு உயர்த்த பணி மும்முரமாக நடந்து வருகிறது.புதுக்கோட்டை பெரியார் நகர் பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் உயரத்தை அதிகரிக்க அதன் உரிமையாளர் திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து இந்த தொழிலில் கைதேர்ந்தவர்களை அணுகி அவர்களை வீட்டிற்கு வரவழைத்து பார்வையிட வைத்துள்ளார். இதனையடுத்து பணியாளர்களை கொண்டு பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்றுள்ளது. முதலில் கீழ் பகுதியை லேசாக இடித்துவிட்டு பல இரும்பு ஜாக்கிகளை சுவற்றின் நடு பகுதியில் வைத்து உயர்த்த தொடங்கியுள்ளனர். கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்த தொடங்கிய பணியாளர்கள் தற்போது இரண்டு அடிக்குமேல் உயர்த்திவிட்டனர்.

இன்னும் வரும் நாட்களில் இந்த பணி தொடர்ந்து நடைபெற உள்ளது. இதன் உயரத்தை நான்கு அடிக்குமேல் உயர்த்த திட்டமிட்டுள்ளனர். இந்த பணியில் பணியாளர்கள் தொடர்ந்தது ஈடுபட்டுள்ளனர். பழைய வீட்டின் உயரத்தை அதிகரிக்க செய்யும் இப்பணியை அப்பகுதியை சேர்ந்தவர்கள் வந்து வேடிக்கையாக பார்த்து சென்ற வண்ணம் உள்ளனர். அப்போது சிலர் தங்களின் வீட்டையும் உயர்த்தலாம் என்ற எண்ணத்தில் இப்பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களிடம் விசாரித்து சென்ற வண்ணம் உள்ளனர்.

Related Stories: