3-வது அலையை தடுக்க தடுப்பூசி செலுத்தியோர் பட்டியல் தேவை...ஒன்றிய அரசிடம் விவரங்கள் கோரப்படும்.: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

மதுரை: தடுப்பூசி செலுத்தியோர் விவரங்கள் ஒன்றிய அரசிடமே உள்ளதால் இனி மதுரையில் தடுப்பூசி செலுத்துவர் விவரங்கள் பதிவு செய்யப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், எந்த பகுதிகளில் 3-ம் அலையின் தாக்கம் இருக்க வாய்ப்பு இருக்கிறது என ஆய்வு செய்ய உள்ளதாக கூறினார். அதனை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தியவர்களின் அனைத்து விவரங்களுக்கு ஒன்றிய அரசிடம் மட்டுமே இருப்பதால் இனி மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்பவரின் அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும் என்றார்.  

தொடர்ந்து பேசிய அவர், ஏற்கனவே தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் அனைத்து விவரங்களையும் ஒன்றிய அரசிடம் கோரியுள்ளதாக கூறினார். தடுப்பூசி செலுத்தியயோரின் விவரங்களை மாநில அரசுகளுக்கு பகிர்வதுதான் கூட்டாட்சி தத்துவம் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Related Stories: