ஊராட்சி குழு சார்பில் மாவட்ட வளர்ச்சி பணிகள் கலந்துரையாடல் கூட்டம்: அமைச்சர் ஆவடி நாசர் பங்கேற்பு

திருவள்ளூர்: மாவட்ட ஊராட்சி குழு சார்பில் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு சார்பில் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து கலந்துரையாடல் கூட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த இரவும், பகலும் தீவிரமாக பாடுபட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் மற்றும் 9 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்றது.  இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலை வகித்தார். துணை தலைவர் டி.தேசிங்கு அனைவரையும் வரவேற்றார்.

இந்த கூட்டத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கி பேசினார். இதில் டாக்டர் கே.ஜெயக்குமார் எம்பி, சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் ஆ.கிருஷ்ணசாமி, டி.ஜெ.கோவிந்தராஜன், எஸ்.சந்திரன், ஜோசப் சாமுவேல், க.கணபதி, துரைசந்திரசேகர், திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதி, மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, மாவட்ட திட்ட இயக்குனர் ஜி.லோகநாயகி, மாவட்ட கவுன்சிலர்கள்  ச.விஜயகுமாரி, கோ.சுதாகர், எம்.சித்ரா, மு.சாரதம்மா, ஏ.ராமஜெயம், டி.தேசராணி, தே.அருண்ராம், த.தேவி, கி.கீதா, டி.தென்னவன், கே.யு.சிவசங்கரி, ச.சரஸ்வதி, ஜி.இந்திரா, ஆ.சதீஷ்குமார் ஏ.ஜி.ரவி, சு.சக்திவேல் மற்றும் அரசு அலுவலர்கள் ஒன்றிய குழு தலைவர்கள், ஒன்றியக்குழு துணைத் தலைவர்கள் கலந்துகொண்டு பேசினர். விழாவின் கடைசியில் மாவட்ட ஊராட்சி செயலர் அ.கென்னடி பூபால ராயன் நன்றி கூறினார்.

Related Stories: