பாரீசில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றது இந்திய மகளிர் அணி !

பாரிஸ்: பாரீசில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்திய மகளிர் அணி சார்பில் தீபிகா குமாரி, கோமளிகா பாரி, அங்கிதா பகத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவர்கள் இறுதிச் சுற்றில் மெக்சிகோ அணியை ஐந்துக்கு ஒன்று என்கிற கணக்கில் வீழ்த்தித் தங்கப்பதக்கம் வென்றனர். இந்திய அணியினர் கடந்த வாரம் நடந்த போட்டியில் கொலம்பிய அணியிடம் தோற்றதால் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதியை இழந்தனர்.

மேலும், உலக கோப்பை வில்வித்தையில் கலப்பு இரட்டையர் ‘ரிகர்வ்’ மற்றொரு பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி - அட்டானு தாஸ் ஜோடி இறுதி போட்டியில் நெதர்லாந்து ஜோடியை எதிர்கொண்டது. இதில் தீபிகா குமாரி - அட்டானு தாஸ் 5-3 என வெற்றி பெற்று தங்க பதக்கம் வென்றனர்.

Related Stories: