உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை ஏற்பாடுகள் தீவிரம்!: ரதங்கள் தயாரிக்கும் பணியில் சிற்பிகள் மும்முரம்..!!

புவனேஷ்வர்: உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோயில் தேரோட்டத்தை கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து, ஜெகநாத், பாலபத்ரா, தேவி சுபத்ரா சிலைகள் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் காணொலி வாயிலாக தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், தேர் திருவிழாவில் பயன்படுத்தப்படும் ரதங்கள் தயாரிக்கும் பணியில் சிற்பிகள் ஈடுபட்டுள்ளனர். 

மரங்கள் கொண்டு வந்து அதில் சிற்பம் செதுக்கி அலங்காரத்தை அவர்கள் தொடங்கியுள்ளனர். கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு பாதிப்புகள் இல்லாதவர்கள் மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்தது. ஜூலை 12ம் தேதி நடைபெறவுள்ள ரத யாத்திரைக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் உறுதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: