கீழ்வேளூர் அடுத்த இலுப்பூரில் வாய்க்கால் பாலம் இடிந்து தண்ணீர் செல்வதில் சிக்கல்-குறுவை சாகுபடி பாதிக்கும் அவலம்

கீழ்வேளூர் : கீழ்வேளூர் அடுத்த இலுப்பூரில் வாய்க்கால் பாலம் இடிந்து கிடப்பதால் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரி டெல்டா மாவட்டத்திற்காக மேட்டூர் அணை கடந்த ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டு, ஜூன் 16ல் கல்லணை திறக்கப்பட்டது. இந்த காவிரிநீர் 5 நாளில் கடைமடை வரை தண்ணீர் வந்தது. இந்த ஆண்டு ஆறுகள், வாய்க்கால்கள் முறையாக தூர் வாரப்பட்டதால் 7 நாளில் வாய்க்கால்களில் தண்ணீர் சென்றது.

இந் நிலையில் ஓடம்போக்கி ஆற்றிலிருந்து காணூர் என்ற இடத்திலிருந்து பிரியும் இலுப்பூர் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் ஆத்தூர், இலுப்பூரில் சுமார் 855 ஏக்கர் பாசனம் கொண்டது. இலுப்பூர் ஆற்றின் தலைப்பு சட்டரஸ் மற்றும் வாய்க்கால் பாலம் நாகை - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் பாலத்தின் நடுவே பள்ளம் ஏற்பட்டு வாய்க்காலில் பாலம் வழியாக தண்ணீர் செல்லாமல் தடைப்பட்டுள்ளது.

இது குறித்து விசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை கூறியும், சேதமடைந்த வாய்க்கால் பாலத்தை தேசிய நெடுஞ்சாலை துறைதான் சரி செய்ய வேண்டும் என்பதால், வாய்க்கால் பாலம் சரி செய்ய முடயாமல் உள்ளது. இலுப்பூர், ஆத்தூர் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு மூலம் குறுவை சாகுபடி செய்துள்ளனர். தற்போது மழை இல்லாததால் மேட்டூர் அணைத் தண்ணீரை வயல்களில் வைத்து விதைநெல் இட்டுள்ளனர். ஆனால் பாலத்தில் ஏற்பட்ட அடைப்பால் தண்ணீர் வராமல் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள சுமார் 700 ஏக்கர் பாசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உடன் நெடுஞ்சாலை துறை துரித நடவடிக்கை எடுத்து காணூரில் இலுப்பூர் வாய்க்கால் தலைப்பில் தேசிய நெஞ்சாலையில் உள்ள சாலை பள்ளத்தில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பாக்கின்றனர்.மேலும் சட்ரசின் மேல் பகுதியில் உள்ள சிமெண்ட் சிலாப் உடைந்து காணப்படுவதால் தண்ணீர் திறந்து விடுவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்து சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: