நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர்

சூரத்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி,  கர்நாடகாவில் உள்ள கோலார் மாவட்டத்தில் நடந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தில்,  ‘மோடி என்ற பெயர் உடையவர்கள் திருடர்களாக இருக்கின்றனர்,’ என பேசினார். இது தொடர்பான வழக்கில், நேற்று சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜரானார். ‘`காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் என்ற முறையில் ஊழல், வேலையின்மை பற்றி கேள்வி எழுப்பினேன். அது எனது உரிமையும் கூட. மோடி அனைவரும் திருடர்கள் என்று கூறவில்லை,’ என ராகுல் வாக்குமூலம் அளித்தார்.  இதையடுத்து, வழக்கை அடுத்த மாதம் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories:

>