இந்தோனேசியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பரமக்குடி கப்பல் இன்ஜினியரை மீட்கக்கோரி கலெக்டரிடம் மனு: உணவின்றி தவிப்பதாக ஆடியோவில் கதறல்

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நயினார்கோவில் ஒன்றியம் அக்கிரமேசி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கோபாலின் மகன் கவின் (32). கப்பல் டீசல் இன்ஜினியர். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.  இந்தோனேசியாவில் பணியாற்றி வந்த கவின் உள்பட 6 பேர், கடந்த 8ம் தேதி சொந்த ஊர் திரும்புவதற்காக விமான நிலையம் வந்தபோது ேபாதிய ஆவணங்கள் இல்லை எனக்கூறி போலீசார் கைது செய்து பாட்டம் என்ற இடத்தில் சிறையில் அடைத்துள்ளனர். இதுபற்றி தனது குடும்பத்திற்கு அனுப்பிய ஆடியோ மெசேஜில், 15 நாட்களாக உணவு, தண்ணீர் தராமல் இருட்டு அறையில் அடைத்து வைத்திருப்பதாக கூறி கவின் கதறியுள்ளார்.

இந்நிலையில் பரமக்குடி வந்த ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சந்திரகலாவை கவினின் தந்தை கோபால் சந்தித்து, இந்தோனேசியா சிறையில் வாடும் மகன் உள்பட 6 பேரை மீட்க இந்திய தூதரகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க ேகாரி மனு கொடுத்தார். அதற்கு கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Related Stories: