8 வழிச்சாலை போராட்ட வழக்குகள் ரத்து சேலத்தில் விவசாயிகள் கொண்டாட்டம்

சேலம்: சேலம்-சென்னை இடையே 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில்விளை நிலங்களை கையகப்படுத்தினர்.

இதை எதிர்த்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை ரத்து செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்கு சேலம், தர்மபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 8 வழிச்சாலையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் பூலாவரி, பாரப்பட்டி, குப்பனூர், குள்ளம்பட்டி, ராமலிங்கபுரம் ஆகிய 5 இடங்களில் விவசாயிகள் திரண்டு, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பட்டாசு வெடித்தும், ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பஸ் நிலையத்தில் திரண்ட விவசாய சங்கத்தினர் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர்.

Related Stories:

>