இந்தியாவில் டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்றுக்கு முதல் பலி!: ம.பி.யில் பாதிக்கப்பட்ட ஐவரில் ஒருவர் உயிரிழப்பு..!!

போபால்: மத்தியப்பிரதேசத்தில் டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்றால் இந்தியாவில் ஏற்படும் முதல் உயிரிழப்பு இதுவாகும். இந்தியாவில் மஹாராஷ்டிரா, கேரளா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் டெல்டா பிளஸ் கொரோனா தொற்று 40க்கும் மேற்பட்டவர்களுக்கு கண்டறியப்பட்டுள்ளது. 

மத்தியப்பிரதேச மாநிலத்தின் போபாலில் மூன்று பேருக்கும், உஜ்ஜெயின் மாவட்டத்தில் இருவருக்கும்  டெல்டா பிளஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் உஜ்ஜெயின் மாவட்டத்தில் டெல்டா பிளஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக மத்தியப்பிரதேச அமைச்சர் விஸ்வாஸ் சாரங் தெரிவித்திருக்கிறார். டெல்டா பிளஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் மற்ற நால்வருக்கு சிகிச்சை  அளிக்கப்பட்டு வருவதாகவும் மத்தியப்பிரதேச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Related Stories:

>