47 நாட்களாக நீடித்த இழுபறிக்கு பின்னர் புதுச்சேரி அமைச்சரவை 27ம் தேதி பதவியேற்கிறது: இலாகா ஒதுக்குவதில் தீவிரம்

புதுச்சேரி: புதுச்சேரியில்  முதல்வராக ரங்கசாமி மே 7ம்தேதி பதவியேற்றார். அதன்பிறகு 47  நாட்களை கடந்த  பின்னரும் அமைச்சரவை பதவியேற்கவில்லை. பல்வேறு கட்ட  பேச்சுவார்த்தைகளுக்கு  பின்னர் பாஜவுக்கு ஒரு சபாநாயகர், 2 அமைச்சர்கள்  என பேசி முடிக்கப்பட்டது. சபாநாயகராக பாஜகவை சேர்ந்த ஏம்பலம் செல்வம் 10  நாட்களுக்கு முன்பு  பதவியேற்றுக் கொண்டார். இதற்கிடையே கவர்னர்  தமிழிசை சவுந்தரராஜனிடம் நேற்று காலை முதல்வர்  ரங்கசாமி சந்தித்து 5 அமைச்சர்கள் பெயர் அடங்கிய  பட்டியலை வழங்கினார். இதில் என்ஆர் காங்கிரசில்  லட்சுமிநாராயணன், காரைக்கால் திருமுருகன்  மற்றும் லட்சுமிகாந்தன்  ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

பாஜவில்  நமச்சிவாயம், சாய்.சரவணன்  குமார் பெயர் இடம்பெற்றுள்ளது. அமைச்சரவை  பட்டியலுக்கு ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்த பின்பே அமைச்சர்களின் பெயர்கள்  அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தெரிகிறது. இதற்கிடையே சட்டசபைக்கு வந்த நமச்சிவாயம், சாய். சரவணன் ஆகியோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பூங்கொத்து கொடுத்தனர். பின்னர் சபாநாயகர் செல்வம் கூறுகையில் , வரும் 27ம் தேதி மாலை 2 மணி முதல் 4 மணிக்குள்ளாக அமைச்சரவை பதவியேற்புவிழா கவர்னர் மாளிகையில் நடைபெற இருப்பதாக தெரிவித்தார். அைமச்சர்களுக்கான இலாகா ஒதுக்கும் பணி நடந்து வருகிறது. இதையடுத்து 47 நாட்களுக்கு பிறகு புதிய அமைச்சரவை பதவி ஏற்பது பற்றிய பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: