ஏரல் அருகே பெருங்குளம் சாலையில் குழாயில் உடைப்பால் வீணாகும் குடிநீர்-சீரமைத்திட வலியுறுத்தல்

ஏரல் : ஏரல் அருகே மங்கலகுறிச்சியில் இருந்து பெருங்குளம் செல்லும் மெயின் சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு மாதமாக தண்ணீர் வீணாகி வருவதோடு மட்டும்மல்லாமல் சாலையும் படுகுழியாக மாறியுள்ளது. இந்த குடிநீர் குழாய் உடைப்பையும், சாலையும் உடன் சீரமைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏரல் அருகே மங்கலகுறிச்சி தாமிரபரணி ஆற்றில் குடிநீர் வடிகால் வாரியம் உறைக்கிணறு அமைத்து தண்ணீர்  உறியப்பட்டு மங்கலகுறிச்சி, பெருங்குளம், பண்டாரவிளை, நட்டாத்தி, சாயர்புரம் வழியாக சாலையோரத்தில் பதிக்கப்பட்ட குழாய் வழியாக தூத்துக்குடியில் ஒரு பகுதி மக்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

இதேபோல் மங்கலகுறிச்சியில் இருந்து சாயர்புரம் கூட்டு குடிநீர் திட்டத்திலும் தண்ணீர்  கொண்டு செல்லப்பட்டு வருகிறது. மேலும் நட்டாத்தி உட்பட பல கிராம பஞ்சாயத்து பகுதிகளுக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குடிநீர் குழாய்களில் அவ்வப்போது உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. கடந்த மாதம் குழாய் ஏற்பட்ட உடைப்பு தினகரன் செய்தியால் சீரமைக்கப்பட்டது. அந்த இடத்திற்கு தென்புறம் உடைப்பு ஏற்பட்டு தினசரி பல ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகிறது. இந்த தண்ணீர் சாலையில் தேங்கி கிடக்கிறது. அவ்வழியாக வாகனங்கள் செல்லும் போது அரிப்பு ஏற்பட்டு ரோடு சேதமடைந்துள்ளது.

இரவில் இவ்வழியாக பைக்கில் வருபவர்கள் இந்த பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு குழாய் உடைப்பு மற்றும் சாலையையும் சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: