தகவல் தொழில்நுட்ப துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு முன் டிவிட்டர் நிறுவன பிரதிநிதிகள் ஆஜர்

டெல்லி: தகவல் தொழில்நுட்ப துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு முன் டிவிட்டர் நிறுவன பிரதிநிதிகள் ஆஜராகியுள்ளனர். டிவிட்டர் தளத்தை குடிமக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது தொடர்பாக டிவிட்டர் பிரதிநிதிகள் விளக்கம் அளித்து வருகின்றனர். டிவிட்டர் தளத்தை தவறாக பயன்படுத்துவதை தடுப்பது குறித்தும் நாடாளுமன்ற நிலைக்குழு முன் டிவிட்டர் விளக்கம் அளித்து வருகிறது. டிவிட்டர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரிகள் கம்ரான், ஆயுஷி கபூர் ஆகிய இருவரும் நாடாளுமன்ற நிலைக்குழு முன் ஆஜராகியுள்ளனர்.

காங்கிரஸ் எம்பி சசிதரூர் தலைமையிலான நாடாளுமன்ற குழு டிவிட்டர் பிரதிநிதிகளுடன் விசாரணை நடத்தியது. டிவிட்டர் நிறுவனத்துக்கும் இந்திய அரசுக்கும் சமீப காலமாக மோதல் இருந்து வருகிறது. அண்மையில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு டிவிட்டர் கணக்கில் இருந்து நீல நிற டிக்கை டிவிட்டர் நீக்கியது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் டிவிட்டர் கணக்கும் பயன்படுத்தப்படவில்லை என கூறி நீல நிற டிக் நீக்கப்பட்டது. முதலில் கருத்து பதிவிடுபவர் விவரத்தை தெரிவிப்பதை கட்டாயமாக்கி ஐடி சட்டத்தை நிறுத்தியது மத்திய அரசு.

ஐடி சட்டத்தின் செய்யப்பட திருத்தத்துக்கு டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்டவை எதிர்த்துள்ளன. சர்ச்சைகள் ஏற்பட்டதை அடுத்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளதால் நாடாளுமன்ற நிலைக்கு முன் ஆஜராகியுள்ளனர்.

Related Stories: