கொரோனா 2ம் அலையை கட்டுக்குள் கொண்டு வந்தது சவாலான பணி!: தமிழக அரசுக்கு அகில இந்திய மருத்துவர் சங்கம் பாராட்டு..!!

காரைக்குடி: தமிழக அரசு கொரோனா பெருந்தொற்றின் 2ம் அலையை சிறப்பாக கையாண்டு கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக அகில இந்திய மருத்துவர் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது. காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வு தேசிய கமிட்டி தலைவர் மருத்துவர் சுரேந்திரன், தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கையால் இறப்பு விகிதம் குறைந்திருப்பதாக தெரிவித்தார். உயிரிழந்த முன்களப் பணியாளர்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி தாமதமின்றி தரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாக சுரேந்திரன் குறிப்பிட்டார். மருத்துவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை கண்டித்து நாடு முழுவதும் கறுப்பு பேட்ச் அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்ததாக அகில இந்திய மருத்துவர் சங்கத்தினர் தெரிவித்தனர். 

தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கொண்டு வந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை நாடு முழுவதும் இந்திய அரசு அமல்படுத்த வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர். 

Related Stories: