கோடி கணக்கில் சொத்து குவிப்பு!: பப்ஜி மதனின் வங்கி கணக்கை முடக்கியது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ்..!!

சென்னை: பப்ஜி மதனின் வங்கி கணக்குகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். யூ - டியூபர் மதன் தடை செய்யப்பட்ட பப்ஜி செயலியை சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்து அதில் ஆபாசமாக பேசி வீடியோ பதிவேற்றம் செய்த விவகாரத்தில் தொடர்ந்து பல்வேறு கருத்துக்கள் எழுந்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு அவர் தலைமறைவானார். 

இதையடுத்து தர்மபுரியில் பதுங்கியிருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். முன்னதாக அவருடைய மனைவியிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் தான் யூ - டியூப் சேனலுக்கு நிர்வாகி என தெரியவந்தது. சாதாரணமாக சென்னை அம்பத்தூரில் 2018ம் ஆண்டு ஹோட்டல் நடத்தி வந்த மதன் அதன் பின்னர் பணமோசடி செய்து ஏமாற்றிவிட்டு தலைமறைவான  பிறகு இதுபோன்ற யூ - டியூப் சேனலை தொடங்கி ஆபாசமாக பேசி கோடிக்கணக்கில் சம்பாதித்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. 

ஏற்கனவே அவரது மனைவியை கைது செய்த போதே மதனின் வங்கி கணக்குகள் மற்றும் அது தொடர்பான முதலீடுகள் அனைத்தையும் போலீசார் கண்டறிந்தனர். குறிப்பாக பிட் காய்னிலும், பங்கு வர்த்தகத்திலும் அதிகளவு முதலீடு செய்தது தெரியவந்தது. பெருங்குளம், சேலம் ஆகிய இடங்களில் சொகுசு பங்களாக்கள் கண்டிருப்பதும், 3 சொகுசு கார்கள் ஆகியவற்றையும் இவர் சொத்துக்களாக குவித்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. 

இவரது வங்கி கணக்கை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது சம்பந்தப்பட்ட வங்கி கணக்கிற்கு பரிந்துரை கடிதம் எழுதப்பட்டது. அதன்படி பப்ஜி மதனின் வங்கி கணக்குகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். மதனின் வங்கி கணக்கில் ரூபாய் 4 கோடி டெபாசிட் உள்ளது. யூ- டியூப்பில் இருந்து வழங்கப்படும் பணம் இந்த வங்கி கணக்குக்கு தான் வரும். மதனின் மனைவி கிருத்திகாவின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: