பராமரிப்பு பணிகளுக்காக பாம்பன் ரயில் பாலத்தில் போக்குவரத்து தடை காரணமாக சிறப்பு ரயில்கள் ரத்து !

ராமேஸ்வரம்: பராமரிப்பு பணிகளுக்காக பாம்பன் ரயில் பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருப்பதால், ராமேஸ்வரத்திலிருந்து இன்று மாலை 04.30 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - திருப்பதி சிறப்பு ரயில் ராமேஸ்வரம் - மண்டபம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மாலை 5 மணிக்கு மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.  அதே போல ராமேஸ்வரத்திலிருந்து இன்று இரவு 08.25 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ராமேஸ்வரம் - மண்டபம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு இரவு 08.55 மணிக்கு மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். மேலும் 24 மணி நேரம் தாமதமாக இன்று இரவு 11.55 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்ட  ராமேஸ்வரம் - மாண்டுயாடிஹ் சிறப்பு ரயில் நாளை  அதிகாலை 12.30 மணிக்கு மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>