தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு சிறப்பாக பணியாற்றியவர்கள், நிறுவனங்களுக்கு அரசு விருது அறிவிப்பு..!!

சென்னை: தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு சிறப்பாக பணியாற்றியவர்கள், நிறுவனங்களுக்கு அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

* விருதுக்கு தேர்வானோருக்கு 10 கிராம் தங்கப் பதக்கம், சான்றிதழ், ரொக்க பரிசுகள் அரசு சார்பில் வழங்கப்படும். 

* மாற்று திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள், அவர்களுக்காக பணிபுரிவோருக்கு ஊக்கம் அளிக்க விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

* மாற்று திறனாளிகளுக்காக பணி செய்தோர், விருதுக்கு விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள் என அரசு அறிவித்துள்ளது. 

* மாற்று திறனாளிகளுக்கு அரும்பணியாற்றிய மாவட்ட ஆட்சியருக்கு தங்க பதக்கம், ரூ.25,000, சான்றிதழ் வழங்கப்படும். 

* தேர்வான தொண்டு நிறுவனங்களுக்கு 10 கிராம் தங்கப் பதக்கம்,  ரூ.50,000 மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். 

* மாற்று திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவருக்கு தங்கப் பதக்கம்,  சான்றிதழ் வழங்கப்படும். 

* மிக அதிகமாக மாற்று திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்துக்கு தங்க விருது, சான்றிதழ் வழங்கப்படும். 

* மாற்று திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய சமூக பணியாளருக்கு தங்க விருது, சான்றிதழ் வழங்கப்படும். 

* மாற்று திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு விருது, சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று சமர்ப்பிக்கலாம். https://awards.tn.gov.in என்ற வலைத்தளத்திலும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: