முன் அறிவிப்பின்றி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாய விலைக் கடையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை: சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நியாய விலைக் கடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ரூ. 2000 நிவாரணம், மளிகை பொருட்கள் வழங்கும் பணி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தி உள்ளார். தமிழகம் முழுவதும் நேற்று முதல் நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் 2-ம் தவணையாக ரூ.2 ஆயிரமும், 14 மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் திடீர் வருகையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

முன் அறிவிப்பு இல்லாமல் தமிழக முதல்வர் திடீரென ஆய்வு நடத்தினார். ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்திற்கான 2000 ரூபாய் வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் மக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதில் குறிப்பிட்டுள்ள நேரத்தின் படி மளிகைப் பொருட்கள், 2-வது தவணை ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது.  தமிழகத்தில் தற்போது கொரோனா நோய் தொற்று படிபடியாக குறைந்த வண்ணம் உள்ளது.

Related Stories: