இந்தியக் கம்யூ கட்சியின் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள்: முத்தரசன் வாழ்த்து

சென்னை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: விடுதலைப் போராட்ட காலத்தில் அரசியல் களமாக விளங்கிய பொள்ளாச்சி நகரில் நடைபெற்ற காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் பொதுக்கூட்டங்களை மாறி, மாறி கவனித்து வந்த சிறுவன் ராதாகிருஷ்ணன், ஜீவானந்தம் ஆற்றிய உரைகளால் ஈர்க்கப்பட்டவர். கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிராக காலனி ஆட்சியும், விடுதலைக்குப் பின்னர் காங்கிரஸ் ஆட்சியும் தொடர்ந்த சதி வழக்கில் கைது செய்யப்பட்டு, பொள்ளாச்சி, கோயமுத்தூர், வேலூர், சேலம் என பல சிறைகளில் அடைப்பட்டு சித்தரவதையை எதிர்கொண்டவர். பெருமைக்கும், போற்றுதலுக்கும் உரிய ராதாகிருஷ்ணன் நூற்றாண்டில் நுழைகிறார் என்கிற இனிய செய்தியால் பெருமகிழ்வு கொள்கிறோம். அடுத்த மூன்றாண்டுகளில் கட்சியின் நூற்றாண்டு தொடங்குகிறது. ஒரு நூறாண்டு வரலாற்றை உள்வாங்கி வாழும் பெருமைக்குரிய ராதாகிருஷ்ணன்  மேலும் பல்லாண்டு வாழ்வாங்கு வாழ்ந்திட மகிழ்ச்சி ததும்ப வாழ்த்துகள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>