வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடைய உள்ளது: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடைய உள்ளது. காற்றழுத்த தாழ்வால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.  கடந்த 2 நாட்களுக்கு முன் வடக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. அந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒடிசா நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசாவை நோக்கி நகர்ந்தது. தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். 

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஓரிரு உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டிருந்தது. ஜூன் 11 முதல் 13 வரை மேற்கு வங்க கடல் பகுதியில் மத்திய வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடாப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஜூன் 13 முதல் ஜூன் 15 வரை கேரளா, கர்நாடகா கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories: