போதைபொருள் கடத்தல் தலைவன் சிறையிலடைப்பு

தூத்துக்குடி: சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவனான, இங்கிலாந்து லிட்டில் ஹாம்ப்டன் பகுதியை சேர்ந்த ஜோனாதன் தோர்ன் (47), படகு மூலம் இலங்கைக்கு செல்ல திட்டமிட்டு நேற்று முன்தினம் தூத்துக்குடி வந்தபோது கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை போலீசார்  தூத்துக்குடி மாஜிஸ்திரேட் ராஜகுமரேசன் முன்பு ஆஜர்படுத்தினர். அவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பதால் சென்னை புழல் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து தூத்துக்குடி கியூ பிரிவு போலீசார், அவரை வேனில் அழைத்து சென்று புழல் சிறையில் நேற்று அடைத்தனர். ஜோனாதன் தோர்னிடம் இருந்து கைப்பற்றப்பட்ட  பாஸ்போர்ட்டுகள் போலியானவை என தெரிய வந்துள்ளது.

Related Stories:

>