கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி: அமைச்சர் தங்கம் தென்னரசுமற்றும் அமைச்சர் பெரியகருப்பன் நேரில் ஆய்வு

கீழடி: சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்து வருகின்றனர். கீழடியில் அருங்காட்சியம் அமைக்கும் பணி குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அகழாய்வு பணி 2020 வரை தொடர்ந்து ஆறு கட்டங்களாக நடைபெற்றுள்ளது.

இந்த அகழாய்வு பணியின் போது பழங்கால மக்கள் பயன்படுத்திய பொருள்கள், தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், கட்டடங்கள், மணிகள், தங்கத்திலான பொருள்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் அந்தப் பகுதியில் இருந்த கண்டெடுக்கப்பட்டன. இந்த 4 இடங்களிலும் ஏழாவது கட்டமாக நடைபெற இருந்த அகழாய்வு பணி கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அகழாய்வு பணிகள் மேற்கொள்ள உள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மழையின் காரணமாக குழியில் தேங்கியிருந்த மழை நீரை அகற்றும் பணியில் கடந்த இரண்டு நாட்களாக பணியாளர்கள் ஈடுபட்டு இருந்ததாகவும், தற்போது அகழாய்வு பணியை மேற்கொள்வதற்கு அனைத்து பணிகளும் ஆயத்தமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாது.

இந்நிலையில் கீழடி: சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்து வருகின்றனர். கீழடியில் அருங்காட்சியம் அமைக்கும் பணி குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதன் முதலாக ஆய்வு செய்து  வருகின்றனர். இவர்களுடன் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் உடன் இருந்து வருகின்றனர்.

Related Stories: