ரூ.200 கோடி மோசடி வழக்கு மும்பையில் தலைமறைவாக இருந்த தொழிலதிபர் கைது

சென்னை: சென்னை அண்ணாசாலையில் ‘மூன் டெக்னாலஜி லிமிடெட் சென்னை’ என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி, அதன் மூலம் மும்பையில் உள்ள நிறுவனத்தில் தனது வாடிக்கையாளர்களை முதலீடு செய்ய வைத்து ரூ.200 மோசடியுடன், மூன் டெக்னாலஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரவி பார்த்தசாரதி தலைமறைவாகி விட்டார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதன்பேரில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நிர்வாக இயக்குநர் ரவி பார்த்தசாரதி அவரது கூட்டாளிகளான அரி சங்கரன், ராம்சந்த் கருணாகரன் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் 2 பேர் ஏற்கனவே கைதான நிலையில், ரவி பார்த்தசாரதியின் ஜாமீன் மனு மீதான வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைதொடர்ந்து தனிப்படை போலீசார் கடந்த 9ம் தேதி மும்பைக்கு சென்று தலைமறைவாக இருந்து வந்த ரவி பார்த்தசாரதியை கைது செய்தனர். பின்னர் சென்னைக்கு அழைத்து வந்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைத்தனர்.

Related Stories: