வாஷிங்டன்: கார் தயாரிப்பில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் பி.எம்.டபிள்யூ நிறுவன முன்னாள் அதிகாரியை ஆப்பிள் நிறுவனம் பணியமர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தானியங்கி கார் தொழில்நுட்பத்தை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், எலக்ட்ரானிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் பணிகளை 2024ம் ஆண்டு தொடங்க உள்ளதாகவும் ஆப்பிள் நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் உற்பத்தி பிரிவின் முன்னாள் அதிகாரியான ஹோல்ரிச் கிரேன்ஸ் தற்போது ஆப்பிள் நிறுவனத்தில் இணைந்துள்ளார். இவர் ஆப்பிள் நிறுவனத்தின் கார் தயாரிக்கும் திட்டத்தை தலைமையேற்று வழிநடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க ஆப்பிள் நிறுவனம் மறுத்துள்ளது. எனினும் ஹோல்ரிச் கிரேன்ஸ், தன் நிறுவனம் கார் உற்பத்தி நடவடிக்கையை வேகப்படுத்த உள்ளதாக கூறியுள்ளார்.